உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலை கருகல் நோயால் ஏக்கர் கணக்கில் பாதிப்பு 

இலை கருகல் நோயால் ஏக்கர் கணக்கில் பாதிப்பு 

கள்ளந்திரி கள்ளந்திரி கால்வாயில் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் கடும் வெயிலால் குலமங்கலம், கள்ளந்திரி பகுதிகளில் இலைக்கருகல் நோய் ஏற்பட்டுள்ளது.குலமங்கலம், வாடிப்பட்டி, கள்ளந்திரி, குமாரமங்கலம், வீரபாண்டி, அலங்காநல்லுார் பகுதி விவசாயிகள் திருப்பதி, ரமணி, ராமசுப்பிரமணியன், செந்தில் கூறியதாவது:45 ஆயிரம் ஏக்கரில் முதல் போக விவசாயம் செய்துள்ளோம். தண்ணீர் வந்து 2 மாதங்கள் ஆகின்றன. தற்போது 60 நாள் பயிரானது கடும் வெயில் காரணமாக இலை கருகல் நோயால் பாதிப்படைந்துள்ளது. பயிர் நுனி முற்றிலும் கருகியுள்ளதால் விளைச்சல் கிடைக்காது.குறிப்பாக நேரடி பாசனம் செய்யும் பகுதிகளில் இப்பிரச்னை உள்ளது. இதுபோக, புதிய வகை களைச்செடிகளால் பயிர்கள் பாதிப்படைந்துள்ளன. 10 ஆயிரம் ஏக்கர் வரை இதனால் பாதிப்படைந்துள்ளது.அதிகாரிகள் பார்வையிட்டு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை