உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  அ.தி.மு.க.,வினர் பாதயாத்திரை

 அ.தி.மு.க.,வினர் பாதயாத்திரை

மேலுார்: மேலுாரில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராக வர வேண்டி பாதயாத்திரை சென்றனர். நகர் செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். ஜெ., பேரவை செயலாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தார். மேலுார், சந்தப்பேட்டையில் இருந்து அழகர் கோவில் சென்ற பாதயாத்திரையை மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா, மேலுார் எம்.எல்.ஏ., பெரியபுள்ளான் துவக்கி வைத்தனர். அழகர்கோவில் சென்ற பின், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர். மாவட்ட அவைத் தலைவர் எஸ்.என். ராஜேந்திரன், பொருளாளர் அம்பலம், ஒன்றியச் செயலாளர்கள் பொன்.ராஜேந்திரன், வெற்றிச் செழியன் அ.ம.மு.க., நிர்வாகி ஆசையன்சாமி, பா.ஜ., நிர்வாகிகள் கண்ணன், சேவுகமூர்த்தி, மேலூர், கொட்டாம்பட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ