மேலும் செய்திகள்
குறுவை துவங்கியாச்சு மேய்ச்சலுக்கு தடை வந்தாச்சு
16-Jul-2025
வாடிப்பட்டி; நெடுங்குளம் பகுதி வயல்களில் களைகளால் நெற்பயிருக்கு பாதிப்பு அதிகரித்தது குறித்து வாடிப்பட்டி வட்டார வேளாண் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இணை இயக்குனர் முருகேசன் தலைமையில் துணை இயக்குனர் சாந்தி, அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், உதவி இயக்குனர் பாண்டி, உதவி அலுவலர் தங்கையா விவசாயிகளின் நெல் வயல்களை பார்வையிட்டனர். வயல்களில் விதை மூலம் பரவும் கோதுமை புல் எனும் களைகள் பரவி இருந்தது. இதனைக் கட்டுப்படுத்த பென்சல் பீயூரான் மீதைல் 0.5 சதவீதம், பிரிட்டிலா குலோர் 6.0 சதவீதம் அல்லது பிரிட்டிலா குலோர் 6.0 மற்றும் பைரசோசல் பியூரான் ஈதைல் 0.15 குருணை மருந்தை ஏக்கருக்கு 4 கிலோ அளவில் நேரடி விதைப்பில் 8 நாட்களுக்கும், நடவு வயலில் 3 முதல் 5 நாட்களில் இட்டும் களைகளை கட்டுப்படுத்தலாம் என்றனர். பிஸ்பைரிபேக் சோடியம் 10 சதவீதம் பயன்படுத்துவதால் மேற்கண்ட களைகள் மகசூலை பாதிக்கும். வயல்களில் பாசி படர்வதை தடுக்க பாஸ்பேட் உரங்களை குறைந்த அளவில் இடவேண்டும். பாசி தென்பட்டால் காப்பர் சல்பேட் ஏக்கருக்கு ஒரு கிலோ இடவேண்டும் என பரிந்துரைத்தனர். யூரியா மற்றும் பொட்டாஷ் உரங்களை அலுவலர்கள் ஆலோசனை பெற்று பயன்படுத்த கேட்டுக் கொண்டனர்.
16-Jul-2025