உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  வேளாண் கருவி இயக்க பயிற்சி

 வேளாண் கருவி இயக்க பயிற்சி

மதுரை: மதுரை மாவட்ட வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் ஒத்தகடை வேளாண் பணிமனையில் வேளாண் இயந்திரங்களை இயக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. செயற்பொறியாளர் சவுந்தரராஜன் கூறியதாவது: ஜன.13 முதல் பிப்.10 வரை நடக்கும் பயிற்சியில் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம். கல்வித்தகுதி தேவையில்லை. டிராக்டர், பவர் டில்லர் உட்பட பல்வேறு இயந்திரங்கள், கருவிகளை ஓட்டவும், பராமரிப்பு குறித்தும் செயல்விளக்கம், பயிற்சி அளிக்கப்படும். வேளாண் கல்லுாரி அருகே அரசு இயந்திரக் கலப்பை பணிமனையில் நடக்கும் பயிற்சியில் பங்கேற்க முன்பதிவுக்கு: 98659 67063.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை