உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க.,கொடிக்கம்பம்    அனுமதிக்க வழக்கு

அ.தி.மு.க.,கொடிக்கம்பம்    அனுமதிக்க வழக்கு

மதுரை : மதுரை கதிரவன். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:அ.தி.மு.க., மதுரை மேற்கு 3ம் பகுதி மாவட்ட பிரதிநிதியாக உள்ளேன். பழங்காநத்தம் பைபாஸ் ரோடு ஜெயம் தியேட்டர் எதிரே பஸ் ஸ்டாப் உள்ளது. அங்கு சில அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் உள்ளன. அ.தி.மு.க.,சார்பில் 53 வது ஆண்டுவிழாவையொட்டி கொடிக்கம்பம் நட அனுமதி கோரி நெடுஞ்சாலைத்துறையிடம் மனு அளித்தோம். உதவி கோட்டப் பொறியாளர், 'விபத்து மற்றும் பாதுகாப்பு காரணம் கருதி அனுமதி வழங்குவதில்லை. போலீசார், வருவாய்த்துறையை அணுகி அனுமதி பெறலாம்,' என உத்தரவிட்டார். அதை ரத்து செய்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி ஜி.கே.இளந்திரையன் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், உதவி கோட்டப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு டிச.13 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ