குராயூரில் ஐப்பசி திருவிழா
திருமங்கலம்: குராயூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நவ., 4ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இரண்டு நாள் திருவிழாவில் முதல் நாள் மஞ்சள் நீராட்டு, மாவிளக்கு வழிபாடும் நடந்தது. இரண்டாம் நாளான நேற்று முளைப்பாரி ஊர்வலம், பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.