உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விமான நிலைய கிரிக்கெட் தொழில் பாதுகாப்பு படை வெற்றி

விமான நிலைய கிரிக்கெட் தொழில் பாதுகாப்பு படை வெற்றி

அவனியாபுரம் : மதுரை விமான நிலையத்தில் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியினர் வெற்றி பெற்றனர். மதுரை விமான நிலையத்தில் ஏர்போர்ட் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. லீக் முறையில் விமான நிலையத்திலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் நடந்த ஏ.பி.எல்., 15 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஏர் இந்தியா, விமான நிலைய இமிக்கிரேஷன், தீயணைப்பு துறை, ஸ்பைஸ்ஜெட், ஸ்ரீலங்கன், இண்டிகோ, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்பட 11 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அணியும், ஏ.ஐ.ஏ.எஸ்.எல். அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஏ.ஐ.ஏ.எஸ்.எல்., அணி 15 ஓவர்களில் 90 ரன்கள் எடுத்தது. பின்பு களம் இறங்கிய மத்திய தொழில் பாதுகாப்பு படை அணி 12.4 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அவர்களுக்கு விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், பயண முனைய மேலாளர் ஷாம் பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி