முன்னாள் மாணவர் சந்திப்பு
பேரையூர்: பேரையூர் தாலுகா எஸ்.கோட்டைப்பட்டி பராசக்திமேல்நிலைப் பள்ளியில் 2003ம் ஆண்டு பிளஸ் டூ படித்த 110 மாணவர்கள் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அதே பள்ளியில் சந்தித்தனர். 'பள்ளிக்குப் போகலாம்' நிகழ்ச்சிக்கு ஏற்பாடுசெய்த மாணவர்கள் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெகதீசனை குத்துவிளக்கு ஏற்ற செய்தனர். கற்றுத்தந்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களின் சிறப்புகளை நினைவு கூர்ந்தனர்.