முன்னாள் மாணவர்கள் கூட்டம்
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முன்னாள் மாணவர்கள் அசோசியேஷன் சார்பில் வருடாந்திர மகா சபை கூட்டம் நடந்தது. தலைவர் சிவக்குமார் வரவேற்றார். செயலாளர் அமர்நாத் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி மாணவர்களின் மதிய உணவு திட்டத்திற்கு ரூ. 1.12 லட்சம், கல்வி உதவித் தொகைக்கு ரூ.40 ஆயிரத்திற்கான காசோலைகளை முதல்வர் ஸ்ரீனிவாசனிடம், கமலக்கண்ணன் வழங்கினார். துணைத் தலைவர் அமர்சிங், துணைச் செயலாளர் ஸ்ரீதரன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், நிர்வாகிகள் ஹரிஹரசுதன், ரவீந்திரநாத், சாந்தாராம், செந்தில், மணிகண்டன், பாலாஜி பேசினர். பொருளாளர் விஷ்ணுகுமார் நன்றி கூறினார்.