ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மனு
மதுரை: மதுரையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதன் ஊழியர்கள் கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் மனு அளித்தனர்'108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இருளாண்டி கூறியதாவது:ஏப். 15 மாலை 6:50 மணிக்கு சமயநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து கர்ப்பிணியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் இரவு 7:50மணிக்கு அனுமதித்து விட்டு மீண்டும் பணியிடத்திற்கு செல்லும் போது அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே ஆம்புலன்ஸை ஓரமாக டிரைவர் முத்துக்குமார் நிறுத்தியுள்ளார். பின்னால் நின்ற ஆட்டோவில் இருந்த சிலர் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பாண்டியராஜனை தாக்கினர். பலத்த காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 2 பெண்கள் உட்பட 5 பேரையும் தமிழ்நாடு மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளோம் என்றார்.