உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தெய்வம், குருவை நிந்தித்தால் உடனே தண்டனை கிடைக்கும் அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள் பேச்சு

தெய்வம், குருவை நிந்தித்தால் உடனே தண்டனை கிடைக்கும் அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள் பேச்சு

மதுரை: ''தெய்வத்தையும், குருவையும் நிந்தனை செய்தால் உடனே தண்டனை கிடைக்கும்'' என்று ஆன்மிக சொற்பொழிவாளர் அனந்தபத்மாச்சாரியார் சுவாமிகள் பேசினார்.மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் 'மகா அதிருத்ர யக்ஞம்' நடந்து வருகிறது. இதில் அனந்த பத்மாச்சாரியார் சுவாமிகள், 'மகாபாரதத்தில் விடையில்லா கேள்வியும், விளக்கமான பதிலும்' என்ற தலைப்பில் பேசியதாவது: திரவுபதி மிகவும் கஷ்டப்பட்டாள். சபையில் அவள் அவமானப்படுத்தப்பட்ட போது யாரும் கேள்வி கேட்கவில்லை. கடைசி காலத்தில் கிருஷ்ணர், தர்மம் பற்றி பீஷ்மரிடம் கேட்கச் சொன்னார்.அதற்கு திரவுபதி, பலர் இருந்த அவையில் தன்னை அவமானப்படுத்திய போது நீங்கள் கேள்வி கேட்கவில்லை. இப்போது என்ன தர்மம் சொல்ல போகிறீர்கள் என கேட்டார். அதற்கு அப்போது கிருஷ்ணன் ஆதரவு இல்லை. இப்போது கிருஷ்ணன் ஆதரவு இருக்கிறது எனச் சொன்னார்.தெய்வத்தையும் குருவையும் யாராவது நிந்தித்தால் உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கண்டிப்பாக கிடைக்கும். யாகம், யக்ஞங்கள் முறைப்படி நடக்க வேண்டும். அது நடந்தால் கர்மயோகம் எனப்படும். உலக நலனுக்காக அதனை செய்ய வேண்டும்.யாக, யக்ஞங்கள் செய்வது பரமேஸ்வரனுக்கு பிடித்த ஒன்று. அதனை செய்தால், முறையான நேரத்தில் மழை பெய்யும். பகவானின் பெருமை, பிரம்ம தத்துவம் தெரியாமல் தானம், தர்மம், யாகம் செய்வது பிரயோஜனம் இல்லை. உலகம் நன்றாக இருக்க ஆண்டாள் நோற்றது பாவை நோன்பு. நாம் ஞானம் அபிவிருத்தியை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார். சொற்பொழிவு டிச. 21ஆம் தேதி வரை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

V வைகுண்டேஸ்வரன்
டிச 20, 2024 21:27

வாழ்க்கையில் வலிகளைத் தருவதும் இறைவன். வலிகளிலிருந்து மீளவும் இறைவனே வழி சொல்வார் என்பதை எப்படி ஏற்பது? அப்ப எதுக்கு வேதனைகள் தந்து பிறகு மீட்க வேண்டும்?? இதுக்கு பருத்தி மூட்டை கோடவுனிலேயே இருந்திருக்கலாமே மொமெண்ட்.


Sivak
டிச 20, 2024 22:01

வேலைக்கு போனா சம்பளம் போனஸ் கொடுக்கறது முதலாளி தான் குடைச்சல் குடுக்கறதும் அந்த முதலாளி தான் ....


M Ramachandran
டிச 20, 2024 20:46

அதெல்லாம் முன் காலத்தில். இப்போது ஒழிப்பேன் என்று வேற்று மதத்தான் கூவு கிறான் அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு . ஒன்றும் செய்ய முடியாது. நீதமரங்களுக்கு பெப்பே காட்டுகிறார்கள். ஒரு தாண்டனையும் கிடயாது


அப்பாவி
டிச 20, 2024 17:11

ஒரு பக்கம் தூய பக்தி இருந்தா போதும். யாக, ஹோமங்கள் வாணாம்பாங்க. இன்னொரு பக்கம் ஸ்ரீமந்நாராயண ப்ரீத்யர்த்தம் டப்பா டப்பாவா நெய்யக் கொட்டி யஞ்சாதிகள் நடக்கும்.


GanesanS
டிச 20, 2024 14:51

கடவுள் பெயரை சொல்லி மனிதன் மனிதனை அடிமையாக்குவது சரியா?


Sivak
டிச 20, 2024 22:03

கடவுள் குரு ஆகியோருக்கு மதிப்பளித்து ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிறார் இதுல எங்கே அடிமை ...?


Nallavan
டிச 20, 2024 11:19

இன்னமும் எத்தனை ஆண்டுக்கு மக்களை பயமுறுத்த முடியும்


சமீபத்திய செய்தி