உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மேற்கு தொகுதியில் அண்ணாமலை நடைபயணம்

மதுரை மேற்கு தொகுதியில் அண்ணாமலை நடைபயணம்

மதுரை: 'என் மண், என் மக்கள்' யாத்திரையின் ஒருபகுதியாக மதுரை மேற்கு தொகுதியில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நாளை (பிப்.,24) காலை 8:30 மணி முதல் ஒரு மணி நேரம் நடைபயணம் செல்கிறார். மத்திய பா.ஜ., அரசின் சாதனைகளை வலியுறுத்தி அண்ணாமலை நடைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டத்திற்கு வந்தபோது மதுரை மேற்கு தொகுதியை தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் சென்றார். நிர்வாக காரணங்களால் அப்போது செல்ல முடியவில்லை.இதனால் நாளை மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜெய்ஹிந்துபுரம், பழங்காநத்தம் செல்கிறார். நடைபயணத்தின் நிறைவு விழா பிப்.,27 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை