உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்

திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை கணக்கில் வராத ரூ.1.11 லட்சம் பறிமுதல்

-திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ் பிரபு, சூரியகலா, பாரதி பிரியா மற்றும் போலீசார் நேற்று மதியம் 3:00 மணிக்கு திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) மலர்மன்னனிடமிருந்து கணக்கில் வராத ரூ.45 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சந்திர கலாவின் அறைக்கு வெளியில் இருந்து கணக்கில் வராத ரூ.37 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டது. உதவியாளர் கார்த்திகா மேஜையில் இருந்து ரூ.10 ஆயிரம், மேலும் அலுவலக ஊழியர்கள் ஆறு பேரிடமிருந்து கணக்கில் வராத ரூ.6 ஆயிரம், அலுவலக பொதுப்பிரிவில் கிடந்த ரூ. 12 ஆயிரம் என ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
அக் 18, 2025 10:42

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார். இதற்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் தரக்குறைவான பணிகள் நடைபெறுகின்றன. மேலும், இந்தப் பணிகளுக்கு உரிய மேற்பார்வை, சோதனை மற்றும் சரிபார்ப்பு ஆகியவை முறையாக செய்யப்படவில்லை. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் sideways சரியாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக ஏற்பட்ட குழிகள் மற்றும் மணல் நிரப்பாத பகுதிகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம் உள்ளது.