மேலும் செய்திகள்
கருப்புத் துணி கட்டி போராட்டம்
06-Jan-2025
போராட்டத்திற்கு அ.ம.மு.க., ஆதரவு
01-Jan-2025
மேலுார்; மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று தெற்கு தெரு, நாயக்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வீட்டு வாசலில் 'டங்ஸ்டன் வேண்டாம்' என்ற வாசகங்களுடன் கோலமிட்டு நுாதன முறையில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பொங்கல் வைத்தபோது 'டங்ஸ்டன் வேண்டாம்' எனக்கூறி குலவையிட்டு வேண்டினர்.
06-Jan-2025
01-Jan-2025