உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் அனுஷ விழா

சோழவந்தானில் அனுஷ விழா

மதுரை : காஞ்சி காமகோடி மடம் சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் காஞ்சி மஹா பெரியவர் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு அனுஷ விழா நடந்தது. ரிக்வேத பாராயணம், பூஜை, தீபாராதனை நடந்தன. ஏற்பாடுகளை ஹரீஷ்சீனிவாசன், கே.ஸ்ரீகுமார், அத்யாபகர் வரதராஜ பண்டிட் செய்திருந்தனர். முள்ளிப்பள்ளம் கிளையில் குரு வந்தனத்துடன் பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீரமணிகண்டன், செய்திருந்தனர். பிக் ஷா வந்தனம் மதுரையில் உள்ள காஞ்சி பக்தர்கள் சார்பில் குரு தட்சணையான பிக் ஷா வந்தனம் திருப்பதியில் முகாமிட்டுள்ள ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கப்பட்டது. பால பெரியவர் உடனிருந்தார். பக்தர்களுக்கு சுவாமிகள் பிரசாதம் வழங்கி ஆசி கூறினார். உலக நன்மைக்காக சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி