சங்க செயற்குழு கூட்டம்
மதுரை : மதுரையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க செயற்குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் சாக்ரடீஸ் தலைமையில் நடந்தது. சி.பி.எஸ். திட்டத்தில் கிராம உதவியாளர்களிடம்ஊதியத்தில் பிடித்த தொகையை வழங்க வேண்டும். வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.17 முதல் 20 வரை சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன் தொடர் உண்ணாவிரதம் இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.