உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை: வாடிப்பட்டி கிரட் குடும்ப ஆலோசனை மையத்தில் அலைபேசி பயன்பாடால் ஏற்படும் பிரச்னைகள், நடத்தை ஆலோசனை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிரெட் தொண்டு நிறுவன செயலாளர் அழகேசன், வழக்கறிஞர் கண்மணி ஒருங்கிணைத்தனர். பெண்களுக்கு உதவும் அவசர உதவி எண் 181, குழந்தைகள் உதவி எண் 1098 குறித்து மதுரை ஒருங்கிணைந்த சேவை மைய அலுவலர் டயானா பேசினார். போலீசார் சுதாசெல்வி, மாரீஸ்வரி, நாகராஜன், ஆலோசகர் காசி விஸ்வநாதன், மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !