மேலும் செய்திகள்
சட்ட விழிப்புணர்வு முகாம்
10-Nov-2024
மதுரை : மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் இந்திய அரசியலமைப்பு இயற்றிய தின விழாவை முன்னிட்டு மதுரை பெட்கிராட் சார்பில் விழிப்புணர்வு விழா நடந்தது. நிர்வாக இயக்குநர் சுப்புராம் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணவேணி வரவேற்றார். இலவச சட்ட உதவி மைய வழக்கறிஞர் வசந்தி சட்ட விளக்கம் குறித்து பேசினார். மாணவர்களின் கேள்விகளுக்கு சார்பு நீதிபதி சரவணன் செந்தில்குமார் பதில் அளித்தார். சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன், பெட்கிராட் பொருளாளர் சாராள் ரூபி, பயிற்சியாளர் கண்ணன் பங்கேற்றனர்.
10-Nov-2024