உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டையில் வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் நடந்தது. ஆறாம் நாளான நேற்று போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வல ஏற்பாடுகளை அமைப்பாளர்கள் சதீஷ்கண்ணன், கணேஷ் செய்திருந்தனர். போலீஸ் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,பாஸ்கரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்களிடையே வினாடி வினா நடத்தி பரிசு வழங்கினர். தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன், போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு, தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுப்பது, போதை பழக்கமுள்ளோரை மீட்பது குறித்து துண்டு பிரசுரங்களை வினியோகித்தார். மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பரமசிவம், பார்மசி கல்லுாரி துணை முதல்வர் ஈஸ்வரன், அக்னிகனவுகள் அறக்கட்டளை ராஜபாண்டி, உதவிப்பேராசிரியர் சுபாவிவேகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ