மேலும் செய்திகள்
விழிப்புணர்வு ஊர்வலம்
25-Dec-2024
மேலுார்: மேலுார் நண்பர்கள், தமிழ்நாடு இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் மற்றும் மேலுார் போலீஸ் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. டி.எஸ்.பி., சிவகுமார் துவக்கி வைத்தார். பழுது நீக்குபவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக டூவீலரில் சென்று ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. மாநில தலைவர் செல்வம், செயலாளர் குமாரவேல், பொருளாளர் ஜமால் முகமது, கிளை நிர்வாகிகள் ரமேஷ், விஜயகுமார், சுரேஷ் பங்கேற்றனர்.
25-Dec-2024