உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

மதுரை: மதுரை மாநகராட்சி, அவனியாபுரம் செயின்ட் ஆன்ஸ் பெண்கள் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு, குப்பை தரம்பிரிப்பு குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அவனியாபுரம் - பெருங்குடி சந்திப்பில் தொடங்கி மண்டேலா நகர் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலம் சென்றனர். முன்னதாக சுகாதாரத்துறை சார்பில் மாணவிகளுக்கு எச்.பி.வி. தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !