உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அயோத்திக்கு தமிழக பக்தரின் அன்பு பரிசு

அயோத்திக்கு தமிழக பக்தரின் அன்பு பரிசு

சென்னையை சேர்ந்த ஆன்மிக எழுத்தாளர் அரவிந்த் சுப்பிரமணியம். அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுத்தவர். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, கும்பாபிேஷகம் நடந்ததை அடுத்து, ராமபிரானுக்கு தன்னாலான காணிக்கையை சமர்ப்பிக்க விரும்பினார். அதன்படி ராமநவமி முதல் உற்ஸவர் விக்ரகம் செய்யும் திருப்பணியை அரவிந்த் தொடங்கினார். இதில், அவரது உறவினர் கணேஷ் நாகராஜும் இணைந்தார். இரண்டு அடி உயர பஞ்சலோக விக்ரகம் தயாரானது. மூலவர் போலவே அமைந்த அந்தச் சிலையை அயோத்தியில் சமர்ப்பிக்க, காஞ்சி ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் அருளாசி வழங்கினார். ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு செல்லப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதுடன், ேஹாமமும் நடந்தது.பின், யாகசாலையில் இருந்து விக்ரகத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோவிலில் சமர்ப்பித்தனர். கோவில் நிர்வாக டிரஸ்ட் பொதுச்செயலர் சம்பத் ராய், டிரஸ்ட் அங்கத்தினரான உடுப்பி பெஜாவர் மடாதிபதி ஸ்ரீ விஷ்வ பிரசன்ன தீர்த்தர் சுவாமிகள் அதை பெற்றுக் கொண்டனர். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ