உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஐயப்ப சேவா சங்க பொதுக்குழுக் கூட்டம்

ஐயப்ப சேவா சங்க பொதுக்குழுக் கூட்டம்

மதுரை : அகில பாரத ஐயப்ப சேவா சங்க பொதுக் குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது.மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்து, சிறப்பு மலரை வெளியிட, மாநில செயலாளர் ஐயப்பன் பெற்றார்.முன்னதாக மாவட்ட செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சபரி மலையில் தமிழ் மாநில அமைப்பு சார்பில் நடத்திய அன்னதானம், சுக்குநீர் வழங்குதல், ஸ்டிரெச்சர் சேவையை தொடர தேவசம்போர்டு அனுமதிக்க வலியுறுத்திதீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தெப்பக்குளம் கிளை சார்பில் மாணவர்களுக்கு இலவச நோட்டு, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகளை, மத்திய பொதுச்செயலாளர் விஜயகுமார் வழங்கினார். செயலாளர் ஐயப்பன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மதுரை மாவட்ட தலைவர் குருசாமி, செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை