உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் தேர்வு

பா.ஜ., மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் தேர்வு

மதுரை: மதுரை மாவட்ட பா.ஜ., தலைவர்கள், மண்டல் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மதுரை மேற்கு மாவட்டத் தலைவராக சிவலிங்கம், கிழக்கு மாவட்ட தலைவராக மீண்டும் ராஜசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தவிர தேர்வு செய்யப்பட்ட பா.ஜ., மண்டல் தலைவர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மாரியம்மன் தெப்பக்குளம் பகுதி மண்டல் தலைவராக குமரன், பிரதிநிதி அருண்பாண்டி, பாலரெங்காபுரம் மண்டல் தலைவராக மணிமாறன், பிரதிநிதி ஹரிசிங், கீரைத்துறை தலைவராக ஐ.பாலமுருகன், பிரதிநிதி ராஜேஸ்வரி, மஹால் பகுதிக்கு தலைவராக திருமுருகன், பிரதிநிதி ஆஷாராணி, மீனாட்சி அம்மன் கோயில் பகுதி தலைவராக பி.பாலமுருகன், பிரதிநிதி கண்ணன், இ.எஸ்.ஐ., அலுவலக பகுதி தலைவராக பாண்டியலட்சுமி, பிரதிநிதி சிவப்பிரகாசம், ஜெய்ஹிந்த்புரம் தலைவராக செல்வகுமார், பிரதிநிதி ராம்ஜி, பழங்காநத்தம் பகுதி தலைவராக சரவணன், பிரதிநிதி கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டனர்.டி.வி.எஸ்., நகர் பகுதி தலைவராக விஸ்வநாதன், பிரதிநிதி மீனா, விளாங்குடி தலைவராக நாகரத்தினம், பிரதிநிதி கஜேந்திரன், காளவாசல் தலைவராக ரங்கராஜன், பிரதிநிதி சிவகுமார், பரவை தலைவராக ராதா, பிரதிநிதி துரை பாஸ்கர், புதுார் தலைவராக முத்துலட்சுமி, பிரதிநிதி காளீஸ்வரி, மேலமடை தலைவராக மணிகண்டன், பிரதிநிதி பாஸ்கர செழியன், தல்லாகுளம் தலைவராக சீதா, பிரதிநிதி மணவாளன், செல்லுார் பகுதி தலைவராக மணிகண்டன், பிரதிநிதியாக வீரபாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை