மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
அலங்கநல்லுார் : அலங்கநல்லுாரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் பாரம்பரிய வாடிவாசல் பின்புறமுள்ள பிறவாடி கோட்டை வாசலில் மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுவதற்கு பா.ஜ.,வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அலங்காநல்லுார் பகுதி மக்கள் தேவைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் வாடி வாசல் பின்புறம் 2.5 லட்சம் கொள்ளளவில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டும் பணி நடக்கிறது. பாரம்பரிய பகுதி என்பதால் தொட்டி கட்ட ஆர்ப்பாட்டம் செய்ய பா.ஜ.,வினர் முடிவு செய்துள்ளனர். மாவட்ட செயலாளர் ரவிசங்கர் கூறியதாவது: பாரம்பரிய விளையாட்டுப் போட்டியை நிறுத்தி விட்டு, ஜல்லிக்கட்டு அரங்கத்தில் போட்டியை நடத்த தி.மு.க., திட்டமிட்டு செயல்படுகின்றனர். குடிநீர் தொட்டியை எதிர்க்கவில்லை; மாற்று இடத்தை தேர்வு செய்யும்படி எதிர்ப்பு தெரிவித்து ஆக.,2ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் ஹிந்து முன்னணி வேல்முருகன் கூறுகையில், ''தாழ்வான பகுதியில் கட்டுவ தால் மேடான பகுதியில் தணணீர் வழங்குவது சிரமமே. கோயில், மக்கள் நம்பிக்கை கலாசாரத்திற்கு இடையூறு செய்வது, மாற்றுவதே தி.மு.க.,வினர் வேலை. தொட்டிகட்ட மேட்டுப் பகுதி வேண்டும் என்றார். பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''பொறி யாளர்கள் ஆய்வு செய்து பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 6 வார்டுகள், பகுதி வார்டுகளுக்கும் குடிநீர் வசதி கிடைக்கும். ஜல்லிக் கட்டு போட்டி காளை களுக்கு இடையூறு ஏற் படாது என தெரிவித்தனர்.
05-Aug-2025