உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பா.ஜ., யாத்திரை நிகழ்ச்சி முகூர்த்தக்கால் நடும் விழா

பா.ஜ., யாத்திரை நிகழ்ச்சி முகூர்த்தக்கால் நடும் விழா

மதுரை: தமிழக பா.ஜ., சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 'தமிழகம் தலைநிமிர; தமிழனின் பயணம்' யாத்திரை நிகழ்ச்சி அக்.12 ல் மதுரை அண்ணாநகரில் இருந்து துவங்க உள்ளது. இந்நிகழ்ச்சியை தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா துவக்கி வைப்பதாக இருந்தது. தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கி வைப்பார் என தெரிவித்துள்ளனர். இதற்கான மேடை அமைக்கும் பணிக்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், செயலாளர் கதலிநரசிங்க பெருமாள், கோட்ட அமைப்புச் செயலாளர் ராமசேகர், மாவட்ட தலைவர்கள் ராஜசிம்மன், மாரிசக்ரவர்த்தி, சிவலிங்கம், மேற்கு மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், பொதுச்செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை