நுால் வெளியீட்டு விழா
மதுரை: மதுரையில் சத்ய சாய் பாபாவின் நுாறாவது பிறந்த நாளை முன்னிட்டு சாய் பஜன் பாடல்களால் அடைந்த பலன்களும் செய்வினையை ஜெயித்ததும் என்ற ஆங்கில மொழி பெயர்ப்பு நுால் வெளியீட்டு விழா நடந்தது. சென்னை தகவல் தொழில்நுட்ப நிறுவன திட்ட மேலாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் கண்காணிப்பாளர் சுந்தரமகாலிங்கம் வெளியிட, மாவட்ட நீதிபதி ரோகிணி பெற்றுக் கொண்டார். விழாவில் மகாத்மா பள்ளி நிறுவனர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். ஆசிரியர் சண்முகையா நுால் குறித்து பேசினார். மகாத்மா பள்ளி குழும நிர்வாகிகள் பிரேமலதா, கார்த்தி, சுந்தரம் இன்டஸ்ட்ரீஸ் முன்னாள் தலைவர் விஸ்வநாதன், ஸ்டேட் வங்கி வேலு முனியப்பன், எப்.சி.ஐ. பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியை சுகாஸ்ரீ நன்றி கூறினார்.