உள்ளூர் செய்திகள்

நுால் வெளியீடு

மதுரை: மதுரை எல்லீஸ் நகரில் சுற்றமும் நட்பும் பதிப்பகம் சார்பில், எழுத்தாளர் திருமலை எழுதிய 'பூமியை வாழ வைப்போம்' நுால் வெளியீட்டு விழா, முடநீக்கியல் துறை டாக்டர் சண்முகம் தலைமையில் நடந்தது. திருப்பரங்குன்றம் அறங்காவலர் சண்முகசுந்தரம் முன்னிலையில், ஸ்டார் குரு அறக்கட்டளை நிறுவனர் குருசாமி தியாகராஜன் நுாலை வெளியிட எழுத்தாளர் தீபா நாகராணி பெற்றார். அவர் பேசுகையில், ''வறட்சி, வெள்ளம், கடும் மழை போன்றவற்றுக்கு காலநிலை மாற்றமே காரணம். சுற்றுச் சூழலை பாதுகாக்க மாற்றம் நம்மிடமிருந்து துவங்க வேண்டும். உயிர்கள் வாழத் தகுந்த பூமியை பாதுகாப்பது அனைவரின் கடமை'' என்றார். திரைப்பட விநியோகஸ்தர் குணசேகரன், வைகை ராஜன் பங்கேற்றனர். ஆசிரியர் சங்கர குற்றாலம் நன்றி கூறினார். பதிப்பக உரிமையாளர் ராமசுப்பிரமணியன் ஏற்பாடு செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை