உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திரு ஆழிக்கல் எனும் எல்லைக்கல்

திரு ஆழிக்கல் எனும் எல்லைக்கல்

மதுரை: மேலுார் அருகே க.கல்லம்பட்டியில் திருமாலின் சக்கரம் செதுக்கப்பட்ட இரண்டு திரு ஆழிக்கல் கண்டறியப்பட்டுள்ளது.ஐந்தரை அடி உயரம், ஒரு அடி நீள, அகலம் கொண்ட செவ்வக கல்லின் நான்கு பக்கங்களின் கீழ் பகுதியில் கும்பம், அதன் மேல் சக்கரம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் மேல் பகுதியில் இருக்கும் சக்கரம் மட்டும் தெரியும் அளவிற்கு திரு ஆழிக் கல் புதைந்த நிலையில் உள்ளது.சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுசெல்வம் கூறுகையில், 'திரு ஆழிக்கல் என்பது பெருமாள் கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லைக் கல் என்பதால் இப்பகுதி பெருமாள் கோயிலுக்காக கொடுக்கப் பட்ட கிராமமாக இருக்கலாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி