உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

 மழையால் செங்கல் தொழில் பாதிப்பு

பேரையூர்: பேரையூர் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் உள்ளன. உள்ளூர் தேவை போக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகின்றன. தற்போது மழை பெய்து வருவதாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதாலும் காளவாசல்களில் 20 நாட்களாக வேலையை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ''ஒரு மாதத்திற்கு முன்பு வரை செங்கல் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது. சில நாட்களாக மழை பெய்து வருவதால் செங்கல் தயாரிக்கும் பணி பாதித்து வேலையை இழந்து உள்ளோம்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்