உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பட்ஜெட் எகிறுது ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1500, பெண் குழந்தைக்கு ரூ.1000; மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் வசூல் கொள்ளை

பட்ஜெட் எகிறுது ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1500, பெண் குழந்தைக்கு ரூ.1000; மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் வசூல் கொள்ளை

மதுரை: இலவசம் என்ற பெயரில் மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் சேரும் கர்ப்பிணிகளிடம் எதற்கெடுத்தால் வசூல் செய்யும் போக்கு ஊழியர்களிடம் அதிகரித்துள்ளது.இம்மருத்துவமனை மகப்பேறு வார்டில் கர்ப்பிணிகள், மகப்பேறு சிகிச்சைக்கு தினமும் 200 பேர் வருகின்றனர். தினமும் 50 முதல் 70 பிரசவம் நடக்கிறது. இதில் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1500, பெண் குழந்தை பிறந்தால் ரூ.1000 என ஊழியர்கள் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கர்ப்பிணிகளின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

குமட்டும் கழிப்பறைகள்

கர்ப்பிணிகள் கூறியதாவது: சுகப்பிரசவத்திற்காக இங்கு வந்து சேருகிறோம். டாக்டர், நர்ஸ்கள் பசி, துாக்கமின்றி சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் அதற்கான பலனை இங்குள்ள பிற பணியாளர்கள் தான் அனுபவிக்கின்றனர். குழந்தை பெறுவதற்கு முன்னும், பின்னும் பல்வேறு வார்டுகளில் சாப்பிடுகிறோம். ஆனால் உணவு கழிவுகளை கொட்டுவதற்கு வார்டில் வாஷ்பேஷினோ, குப்பைத்தொட்டியோ இல்லை. கழிப்பறைக்குள் தான் கொட்ட வேண்டிஉள்ளது. 'நாப்கின்', உணவு கழிவுகள் எல்லாமே கழிப்பறையில் நிரம்பி வழிகிறது. குளியலறைக்குள் உணவுக்கழிவுகள் நிறைந்துள்ளதால் குளிப்பதற்கும் கஷ்டமாக உள்ளது. 3வது, 4வது, 5வது மாடியிலும் இப்பிரச்னை தான் உள்ளது.5வது மாடியில் கழிப்பறை மூடப்பட்டுள்ளது. கை, பாத்திரங்களை கழுவ கழிப்பறை தான் செல்ல வேண்டும். வாஷ்பேஷின் குழாயை தரையோடு இணைக்காததால் பாத்திரம் கழுவும் போது உணவு கழிவுகள் கழிப்பறை தரை முழுவதும் சிதறுகிறது. பெட்சீட்டையும் அடிக்கடி மாற்றாததால் அழுக்கடைந்து சுகாதாரக்கேடாக இருக்கிறது.

வசூலில் கொள்ளை

ஆண் குழந்தை பிறந்தால் உடனடியாக ரூ.1500 தரவேண்டும், பெண் குழந்தைக்கு ரூ.1000 தர வேண்டும் என மிரட்டுகின்றனர். பணம் இல்லையென்றாலும் விடுவதில்லை. குழந்தை பெற்ற பின் எங்களை சுத்தம் செய்து 'நாப்கின்' வைப்பதற்கு தனி கட்டணம், வார்டு, கழிப்பறை சுத்தம் செய்பவர்களுக்கு தினமும் தனியாக செலவழிக்க வேண்டும். விட்டால் போதுமென 'டிஸ்சார்ஜ்' ஆனாலும் வார்டு கண்காணிப்பாளர்களுக்கு குறைந்தது ரூ.100 கொடுக்க வேண்டும். சுகப்பிரசவமாகி 3 நாட்களில் வீடு திரும்புவதற்குள் குறைந்தது ரூ.3000 செலவாகிறது. அறுவை சிகிச்சை என்றாலோ குழந்தைக்கு பிரச்னை என்றாலோ ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை வார்டில் இருக்க வேண்டும். அப்போது இந்த தொகை இன்னமும் அதிகமாகும் என்றனர்.டீன் இதுகுறித்து கர்ப்பிணிகள், உறவினர்களிடம் விசாரித்து வசூலில் ஈடுபடும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆண் குழந்தை பிறந்தால் உடனடியாக ரூ.1500 தரவேண்டும், பெண் குழந்தைக்கு ரூ.1000 தர வேண்டும் என மிரட்டுகின்றனர். பணம் இல்லையென்றாலும் விடுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Neutrallite
பிப் 12, 2025 10:31

ஏழை, பாவம் கஷ்டமான தொழில் செய்கின்றனர் என்று முதலில் சிலர் தானாக கொடுத்ததில் விளைவு. கொடுக்காதவர்களுக்கு பிரச்சனை.


viswanadhan
பிப் 12, 2025 10:27

salem gh lum idhe nilamai thaan


சமீபத்திய செய்தி