உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சக்கரப்ப நாயக்கனுாரை கண்டுகொள்ளாத பஸ்கள் 

சக்கரப்ப நாயக்கனுாரை கண்டுகொள்ளாத பஸ்கள் 

சோழவந்தான்: 'சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் சக்கரப்ப நாயக்கனுாருக்கு பஸ்கள் சரியாக வருவதில்லை' என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அப்பகுதி ஆறுமுகம் கூறியதாவது: ஆறு கிராமங்களின் மையமாக சக்கரப்ப நாயக்கனுார் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து இங்குள்ள உயர்நிலைப் பள்ளிக்கு ஏராளமானோர் வருகின்றனர். பெரியார் நிலையத்திலிருந்து மேலக்கால், மேலப்பெருமாள்பட்டி வழித்தடத்தில் பஸ் இயக்கப்பட்டது.தற்போது மேலக்கால், நரியம்பட்டி வழியாக பஸ் இயக்கப்படுகிறது.பழைய வழித்தடத்தில் உள்ள ஊர்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் இப்பள்ளியில் படிக்கின்றனர்.இந்த பஸ் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் பள்ளிக்கு சரியாக வர முடியாமல் சிரமப்படுகின்றனர். ஒரு நாளில் 5 முறை இயக்கப்பட்ட பஸ்கள் 2 முறை மட்டுமே வருகிறது.அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.பழைய வழித்தடத்திலேயே பஸ்சை இயக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ