திரும்பிய கேமரா: மக்கள் சந்தேகம்
மேலுார் : கிடாரிப்பட்டியில் ஊராட்சி சார்பில் குற்றங்களை தடுக்க 17 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதில் மெயின் ரோடு, பஸ் ஸ்டாண்ட், பள்ளி, ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கேமராக்கள் மேல் நோக்கியும், தலைகீழாகவும் மாற்று திசையில் திருப்பி வைக்கப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குற்றங்களில் ஈடுபடுவதற்காக மர்மநபர்கள் திருப்பி வைத்தார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.ஊராட்சி செயலாளர் அழகேந்திரன் கூறுகையில், ''திசை திருப்பி வைக்கப்பட்ட கேமராக்கள் சரி செய்யப்படும்'' என்றார்.