உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்த கால்வாய்

ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்த கால்வாய்

சோழவந்தான்: அணைப்பட்டியில் இருந்து சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு வரும் வடகரை கால்வாயை ஆகாயத்தாமரைகள் ஆக்கிரமித்துள்ளன. அணைப்பட்டியில் இருந்து வரும் முல்லையாற்று கால்வாயில் பிரிந்து சோழவந்தான் வடகரை கண்மாய்க்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. கருப்பட்டி, அம்மச்சியாபுரம், கணேசபுரம், பொம்மன்பட்டி, நாச்சிகுளம் பகுதி விவசாய பாசனத்திற்கு முக்கிய ஆதாரமாக இக்கால்வாய் உள்ளது. இதில் ஆங்காங்கே ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல தடையாக உள்ளது. இதனால் விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை