கஞ்சா வழக்கு: இருவருக்கு சிறை
மதுரை : திண்டுக்கல் பாண்டியராஜன் 37, அன்பு கடவுள் 38. இவர்களிடம் 1.250 கிலோ கிராம் கஞ்சாவை திண்டுக்கல் டவுன் மேற்கு போலீசார் 2022 ல் பறிமுதல் செய்தனர். விசாரணை கலவர வழக்கு மற்றும் போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயகுமாரி ஜெமி ரத்தினா உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் ஆஜரானார்.