கஞ்சா கடத்தல் வழக்கு: 2 பேருக்கு சிறை
மதுரை: மதுரை ஜெய்ஹிந்த் புரம் கார்த்தி 34, பாசிங்காபுரம் அஜய் 23 ஆகியோர் 2022 ஜூலையில் கூடல்நகர் பஸ் ஸ்டாப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது போலீசார் நடத்திய வாகன சோதனையில் அவர்கள் 1.5 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, மதுரை மாவட்ட முதலாவது போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நேற்று நடந்த விசாரணையில் இருவருக்கும் தலா 4 மாத சிறை, தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது. ப ோக்சோ வழக்கு 7 ஆண்டு சிறை
மதுரை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில் கரும்பாலை பழனிசாமி 49, மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கு மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.நேற்று நடந்த வழக்கு விசாரணையில் பழனிசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.இவ்வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட கூடல்புதுார், தல்லாகுளம் போலீசாரை கமிஷனர் லோகநாதன் பாராட்டினார்.