மேலும் செய்திகள்
குப்பை தீயால் குடிசை சாம்பல்
14-Jun-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் திருடுபோன சரக்கு வேனை போலீசார் வேலுாரில் மீட்டு மூவரை கைது செய்தனர்.உசிலம்பட்டி அருகே இ. புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் 65. இவரது பால்கேன்கள் ஏற்றும் வேன் ஜூன் 20ல் பால்கேன்களுடன் திருடுபோனது. டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். வத்தலக்குண்டு வழியாக சென்ற வேனில் பெயர்பலகை, பதிவெண்ணை மாற்றி வேலுார் பகுதியில் நிறுத்தியிருந்தது தெரிந்தது.வேனை போலீசார் மீட்க சென்றபோது அப்பகுதியினர் சூழந்து கொண்டு தடுத்தனர். உள்ளூர் போலீசார் உதவியுடன் வேன் மீட்கப்பட்டது. பெரம்பலுார் மாவட்டம் பிள்ளங்குளம் வெங்கடேசன் 26, ராணிப்பேட்டை மாவட்டம் வெங்கடாபுரம் சரவணன் 26, தேனி மாவட்டம் குன்னுார் மாயவர் 32, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இக்கும்பல் இதுபோல் தொடர் வாகன திருட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
14-Jun-2025