மேலும் செய்திகள்
போலீஸ் வளையத்தில் திருப்பரங்குன்றம்
22 hour(s) ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அலுவலக கண்காணிப்பாளர் ரஞ்சனி திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஹிந்து அமைப்பை சார்ந்த திருமாறன்ஜி, சோலை கண்ணன், ராமலிங்கம், வேல்முருகன், கிருஷ்ணகுமார், சுடலை ஆனந்தா சுவாமி, செந்தில்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கலவரம் ஏற்படுத்தும் விதமாக அரசுக்கும், அறநிலையத்துறைக்கும் எதிராக கோஷமிட்டவாறு, கோயில் அலுவலகத்திற்குள் புகுந்து பணி செய்ய விடாமல் கூச்சலிட்டனர். பாதையை அடைத்து அலுவலகத்திற்குள் அமர்ந்து முற்றுகையிட்டு வெளியே பொதுமக்களுக்கு அச்சமூட்டும் விதமாக கோஷங்களை எழுப்பினர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
22 hour(s) ago