உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நரசிங்கம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு

நரசிங்கம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிராக வழக்கு

மதுரை: மதுரை நரசிங்கம் சசிகுமார். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:நரசிங்கம் ஊராட்சியை மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இணைப்பதற்கு தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை டிச.31 ல் அரசாணை வெளியிட்டது. இதில் கவர்னரின் கையெழுத்து இல்லை. இணைப்பதற்கு ஏற்புடைய காரணங்களை தெரிவிக்கவில்லை. ஏற்கனவே மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை. நரசிங்கத்தை இணைத்தால் சொத்துவரி உயரும். விவசாயிகள் பாதிக்கப்படுவர். அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எல்.விக்டோரியா கவுரி பிப்.7 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ