பத்திரப்பதிவிற்கு லஞ்சம் சார் பதிவாளர் மீது வழக்கு
மதுரை : மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வருவோரிடம் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் வந்தன.டி.எஸ்.பி., சத்யசீலன், இன்ஸ்பெக்டர்கள் குமரகுரு, ரமேஷ்பிரபு நேற்று முன்தினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். கணக்கில் வராத ரூ.1.98 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மாவட்ட ஆய்வுக்குழு அலுவலக துணை அலுவலர் ஜெயசர்மிளா புகார் செய்தார். சார்பதிவாளர் வீரகுமார், இடைத்தரகர்கள் பழனியப்பன், முத்துக்குமார் மீது இன்ஸ்பெக்டர் சூர்யகலா வழக்குப்பதிந்தார்.