உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கால்வாய்களை துார்வார வழக்கு

கால்வாய்களை துார்வார வழக்கு

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கிடாதிருக்கை சதீஷ். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:முதுகுளத்துார், கடலாடி, கமுதி பகுதியிலுள்ள நீர்வரத்து கால்வாய்களை அரசு முறையாக பராமரிக்கவில்லை. புதர்கள் மண்டியுள்ளன. கண்மாய்களுக்கு நீர்வரத்து தடைபட்டுள்ளது. விவசாயம் பாதித்துள்ளது. கால்வாய்களை துார்வார எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு அனுமதிக்க அரசுக்கு மனு அனுப்பினோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர்மோகன் அமர்வு கலெக்டர், மதுரை நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு செப்.30க்கு ஒத்திவைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Devanand Louis
செப் 26, 2024 08:58

மதுரை திருமங்கலம் நகராட்சியின் மிகவும் மோசமான வேலைகள் - ஜலஜீவன் திட்டத்தில் ஆங்காகே தெருக்களில் pipeline வேலைகள் நடைபெறுகிறது , ஆங்காங்கே தோண்டப்படும் வாய்க்கால்கள் மற்றும் பள்ளங்களை சாரியாக மூடுவதில்லை - தினமும் ஆங்காகே விபத்துகள் நடைபெறுகிறது . நகராட்சிஊழியர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் லஞ்சப்பணம் வாங்கிக்கொண்டு மேடு பள்ளங்களை சரியாக மூடுவதில்லை . அணைத்து விபத்துகளுக்கு நகராட்சியின் கமிஷனர் மற்றும் ஊழியர்கள்தான் பொறுப்புஏற்கவேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை