உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜல்லிக்கட்டில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : ஜல்லிக்கட்டு போட்டியின்போது தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க தாக்கலான வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதில் சில அமைப்புகள் முதல் மரியாதை, முன்னுரிமை கோரின. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019ல் வழக்கு தொடர்ந்தேன். பங்கேற்கும் காளைகள் குறித்த அறிவிப்பின்போது அவற்றின் உரிமையாளர்களின் பெயரோடு கூடிய ஜாதிப் பெயர்களை தவிர்க்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை மீறும் வகையில் கடந்தகால ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஜாதிப் பெயர்களை குறிப்பிட்டு அறிவிப்பு செய்யப்பட்டது. இப்படி அறிவிப்பு செய்வதை தவிர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் பாகுபாட்டை தவிர்க்க போட்டி அமைப்பாளர்கள், பங்கேற்போர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க வேண்டும் என தமிழக வருவாய்த்துறை செயலர், கால்நடைத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: ஏற்கனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பின்பற்றப்படும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுப்பது தொடர்பாக மனுவை வருவாய்த்துறை செயலர் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி