உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரசாயன உற்பத்தி நிறுவன ‛போர்ட்டல்

ரசாயன உற்பத்தி நிறுவன ‛போர்ட்டல்

மதுரை : ரசாயன உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய பொருட்களில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கான மத்திய அரசின் புதிய இணையதள 'போர்ட்டல்' குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மதுரை மடீட்சியாவில் நடந்தது.மடீட்சியா நிர்வாகிகள் லட்சுமி நாராயணன், முருகன் ஏற்பாடுகளை செய்தனர். மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயன அமைச்சக உதவி இயக்குநர் சத்யபால் சங்வன், டேட்டா விஞ்ஞானி அங்கிதா பங்கேற்றனர்.தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மண்டல மேலாளர் ராஜவேல், முதுநிலை மேலாளர் நந்தகோபால் கூறியதாவது: மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயன அமைச்சகம் சார்பில் புதிய 'போர்ட்டல்' உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு பதிவேற்றப்படுகின்றன.ஒவ்வொரு நிறுவனத்திலும் எந்த வகையான ரசாயன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன, அவற்றுக்கான மூலப்பொருட்கள் எங்கு வாங்கப்படுகிறது, தயாரித்த பொருட்கள் எதற்கு பயன்படுகிறது, யாருக்கு விற்கப்படுகிறது என்ற தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். அதன் பின் ரசாயனங்கள் பட்டியலிடப்பட்டு எந்தெந்த மாநிலத்திற்கு இணைய முனையம் (ஹப்) உருவாக்கலாம் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும்.சிவகாசியில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் குறித்தும் மதுரை கப்பலுார் தொழிற்பேட்டையில் சிறு ரசாயன உற்பத்தி நிறுவனங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி