மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி விழா கொண்டாட்டம்
03-Oct-2025
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி, குருபூஜையை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, தியாக ராஜன், ராஜா, கனிமொழி எம்.பி., தளபதி எம்.எல்.ஏ., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் துரைகோபால்சாமி உள்பட பலர் பங்கேற்றனர். ம.தி.மு.க., சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அவர், பொடோ சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்த ஆண்டுகளைத் தவிர 49 ஆண்டுகளாக முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என்றார். நகர் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் கட்சி நிர்வாகிகள், காங்., சார்பில் நகர் தலைவர் கார்த்திகேயன், கவுன்சிலர்கள் முருகன், ராஜபிரதாப், பொதுக்குழு உறுப்பினர் சையதுபாபு, அ.ம.மு.க., சார்பில் பொதுச் செயலாளர் தினகரன், சசிகலா மாலை அணிவித்தனர். த.வெ.க., சார்பில் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் நிர்மல்குமார், அருண்ராஜ் மாலை அணிவித்தனர். பா.ஜ., சார்பில் மாநில பொதுச் செயலாளர் ராமசீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்தனர். நகர் தலைவர் மாரிசக்கரவர்த்தி, நிர்வாகிகள் சுசீந்திரன், பாஸ்கரன், மகேந்திரன், வேல் பாண்டியன், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர். ஏ.பி.வி.பி., சார்பில் மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் தலைமையில் மரியாதை செய்யப்பட்டது. செல்லுார், காமராஜபுரம், உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோரிப்பாளையம் வந்தனர். போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அ.தி.மு.க., மரியாதை தெப்பக்குளம் மருதுபாண்டியர் சிலைக்கும் முதல்வர் ஸ்டாலின் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க., சார்பில் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார், எம்.எல்.ஏ.,க்கள் ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான், மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், இளைஞரணி துணைச்செயலாளர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், எஸ்.எஸ். சரவணன் பங்கேற்றனர்.
03-Oct-2025