உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குழந்தைப் பருவ புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

குழந்தைப் பருவ புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தகவல்

மதுரை : மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில், 'குழந்தைப்பருவ புற்றுநோய்'விழிப்புணர்வு 'மாரத்தான்' நிகழ்ச்சி, எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்கா முதல் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வரை நடந்தது.எஸ்.ஆர்., டிரஸ்ட் செயலர் காமினி, எச்.சி.எல்., டெக் மதுரை மையத் தலைவர் திருமுருகன் சுப்புராஜ் முன்னிலை வகித்தனர். கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்துப் பேசுகையில், ''இந்நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டும் என்பதை உணர்வதும் முக்கியமானது. இந்நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்'' என்றார்.டிரஸ்ட் செயலர் காமினி பேசுகையில், ''பிறந்தது முதல் 14 வயதுக்குள் வரும் குழந்தைப்பருவ புற்றுநோய்கள், குடும்பங்களின் மீது உணர்வு ரீதியாக மிகப்பெரும் சுமையை ஏற்றுகின்றன. புற்றுநோயாளிகளில் இதன் பங்கு 4 சதவீதம் என்றாலும், பாதிப்பு மிகப்பெரியது. மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றங்களால் சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடியதாக உள்ளது. இன்று நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் அவர்கள் சிகிச்சை, ஆதரவு பெறுவதை உறுதிசெய்யும் என்றார்.மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன், இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி, டாக்டர்கள் காசி விஸ்வநாதன், கிருஷ்ணமூர்த்தி, சம்பத்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ