உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சிட்டி ஸ்போர்ட்ஸ்

சிட்டி ஸ்போர்ட்ஸ்

மதுரை: திருப்பூர் விருக் ஷா எல்லீஸ் டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில் பள்ளிகளுக்கு இடையிலான ஓபன் பிரிவு டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி, ஈரோடு, ஊட்டி, கோவை, அரக்கோணம், சென்னை, எர்ணாகுளத்தைச் சேர்ந்த 200 பேர் பங்கேற்றனர்.

ஒற்றையர் பிரிவு முடிவுகள்

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பினருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் கோவை சாதனா தேனி ஷிவானி ஸ்ரீயை வீழ்த்தினார். மதுரை ஜூகைன் சையதீன் ஈரோடு அர்ஜூனை வீழ்த்தினார். 4 முதல் 6 ம் வகுப்பினருக்கான போட்டியில் கோவை சஷ்டி தேனி தன்விஷா ஸ்ரீயையும் தேனி ஆதி அந்தலிங்கம் மதுரை ஜூகைன் சையதீனை வீழ்த்தினர். 6 முதல் 9ம் வகுப்பினருக்கான போட்டியில் ஈரோடு ஹேமந்த் ஈரோடு தருணை வீழ்த்தினார். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் தேனி அக் ஷரா தேனி ஆத்மிகாவை வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் தேனி சபரிநாதன் கோவை செந்துாரபாண்டியை வீழ்த்தினார்.

இரட்டையர் பிரிவு

ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையான இரட்டையர் பிரிவில் தேனி ஷிவானி ஸ்ரீ, தன்விதா ஸ்ரீ ஜோடி மதுரை ஜூகைன் சையதீன், ரிதேஷ் ஜோடியை வீழ்த்தினர். ஓபன் இரட்டையர் பிரிவில் ஈரோடு ஹேமந்த், தருண் ஜோடி தேனி ஸ்ரீதேவி, லிங்கேஸ்வரி ஜோடியை வீழ்த்தினர்.லோட்டஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் சகாதேவன், ஈரோடு மத்திய ரோட்டரி சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் செந்தில்குமார், விருக் ஷா சர்வதேச பள்ளித் தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் பரிசு வழங்கினர். பயிற்சியாளர்கள் சுந்தர், சுந்தர்பாபு, பாலகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை