உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காலநிலை மாற்றம்: வழிகாட்டி வெளியீடு

காலநிலை மாற்றம்: வழிகாட்டி வெளியீடு

மதுரை: மதுரை மாநகராட்சி சார்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய வழிகாட்டி புத்தகத்தை துணைமேயர் நாகராஜன், கமிஷனர் கவுரவ் குமார் வெளியிட்டனர். மாநகராட்சியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பாதுகாப்புடன் தெருக்களை உருவாக்குதல், விரிவான ரோடுகள், தெரு வடிவமைப்பு வழிகாட்டுதல், வாகன நிறுத்த கொள்கை உத்தி, செயல்திட்டம் உருவாக்குவது தொடர்பாக ஐ.டி.டி.பி., இந்தியா (போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம்) உடன் மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. கமிஷனர் கூறியதாவது: நகரில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல், நடைபாதை இல்லாமை, முறையற்ற வாகன நிறுத்தம், ஒழுங்குபடுத்தப்படாத ரோட்டோர கடைகள் போன்ற சவால்களை மாநகராட்சி எதிர்கொள்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இச்சவால்களை கையாளும் வகையில் நகர் முழுவதும் ரோடுகள், வாகன நிறுத்தங்களை திட்டமிடுதல், வடிவமைத்தல் போன்றவை ஐ.டி.டி.பி.,வுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், போக்குவரத்து துணை கமிஷனர் வனிதா, தலைமை பொறியாளர் ராமசாமி, ஆர்.டி.ஓ., கருணாகரன், நெடுஞ்சாலை உதவி இயக்குநர் அருண்பிரகாஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை