உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பெண்களின் வாழ்வாதாரம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கலெக்டர் சங்கீதா பெருமிதம்

பெண்களின் வாழ்வாதாரம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கலெக்டர் சங்கீதா பெருமிதம்

மதுரை: 'தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது' என கலெக்டர் சங்கீதா பெருமிதம் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் 'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட செயல்பாடுகள் குறித்து திருமோகூர் ஊராட்சியில் கலெக்டர் சங்கீதா ஆய்வு செய்தார்.உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால், திட்ட அலுவலர் சுந்தர பாண்டியன், வேளாண் வணிக துணை இயக்குநர் மேரி, ஊராட்சித் தலைவர் அண்ணாமலை பங்கேற்றனர். இத்திட்டத்தில் பயனடைந்த குழுக்களின் உற்பத்திப் பொருட்களை பார்வையிட்ட கலெக்டர், திருமோகூர் செம்பருத்தி தையல் தொழில் கூட பெண்களுடன் கலந்துரையாடினார்.அவர் கூறியதாவது:-உலக வங்கியின் நிதியுதவியுடன் இத்திட்டம், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலுார், கொட்டாம்பட்டி தாலுகாக்களில் 137 ஊராட்சிகளில் செயல்படுகிறது. இத்திட்டத்தில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டு, ரூ.31 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி குழுக்களுக்கு தொடக்க நிதி மானியமாக தலா ரூ.75 ஆயிரம் வீதம் 108 குழுக்களுக்கு ரூ. 81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.'கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி கூட்டமைப்பு, புலம் பெயர்ந்து திரும்பிய இளைஞர்களுக்கு தனிநபர் தொழில் கடன் என, இதுவரை 3 ஆயிரத்து 331 பயனாளிகளுக்கு ரூ.9.06 கோடி தொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது.நுாறு சதவீதம் கடனை அடைத்தவர்களுக்கு மீண்டும் கடன் வழங்கப்படுகிறது. மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த தொழில் திட்டம் தயாரித்தல், உரிமம் பெற்று தருதல், வணிகதிட்டம் தயாரித்தல் உட்பட பல்வேறு சேவைகளை 'மதி சிறகுகள் தொழில் மையம்' வழங்குகிறது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ