மேலும் செய்திகள்
புதுமை கற்பித்தல் வெற்றிகளைக் கொண்டாடுங்கள்
25-Sep-2025
மேலுார்: அ. வல்லாளபட்டி பேரூராட்சியில் கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். சாம்பிராணிபட்டியில் ரூ.5.70 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டி, நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.76 லட்சத்தில் அமைக்கப்பட்ட தார் சாலை, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் கட்டப்படும் வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். அரசு மேல்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். தாசில்தார் செந்தாமரை, ஒன்றிய அலுவலக அதிகாரிகள் உடனிருந்தனர்.
25-Sep-2025