உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கல்லுாரி நாள் விழா

 கல்லுாரி நாள் விழா

சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்தா கல்லுாரியில் கல்லுாரி நாள், நிறுவனர் சித்பவானந்தர் 129வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் சுவாமிநாதன் வரவேற்றார். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன துணைத் தலைவர் சுவாமி நியமானந்தா, 'ஆன்மிகத்தையும், பண்டைய பாரத பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு கல்விக்கான பாடத்திட்டம் அமைய வேண்டும்' என்றார். செயலர் சுவாமி வேதானந்த குலபதி, சுவாமி அத்தியாத்மானந்த ஆசியுரை வழங்கினர். முதல்வர் கார்த்திகேயன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு மத்திய பல்கலை வேதியியல் துறை இணைப்பேராசிரியர் ராஜேந்திரன் வேணுகோபால் கல்வியில் சிறந்த மாணவருக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினார். துணை முதல்வர் சந்திரசேகரன் நன்றி கூறினார். வேதியல்துறை பேராசிரியர் தர்மானந்தம் தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை